Follow Us On:

;

ம,ஜ,க,வின் மாணவர் இந்தியா சார்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

📅Nov 3rd 2025

ம,ஜ,க,வின் மாணவர் இந்தியா சார்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

Event Banner

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் முகம் நடைபெற்றது, இந்த முகாமில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாணவர் பிரிவான மாணவர் இந்தியா சார்பில் பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இதில் முதன்மையான கோரிக்கையாக ,மாணவர் இந்தியாவின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஈரோடு அமீன் அவர்கள் ,மாற்றுத் திறனாளிகள் பயன்பாட்டிற்கான மூன்று சக்கர மோட்டார் வாகனங்களில் reverse gear (பின்னோக்கி இயக்கம்) வசதி அமைக்க கோரிக்கை வைத்தார். தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமான மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர மோட்டார் வாகனங்கள் சிறப்பான முறையில் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக மாணவர் இந்தியா அமைப்பு சார்பாக மனமார்ந்த நன்றி தெரிவித்தனர் . மற்றும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வாகனங்களில் reverse gear (பின்னோக்கி இயக்கம்) வசதி இல்லாததால், வாகனம் சகதியில் மாட்டிக்கொண்டாலோ அல்லது கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டாலோ, பின்னோக்கி இயக்குவது கடினமாகிறது. ஒவ்வொரு முறையும் பிறரின் உதவியை நாட வேண்டியுள்ளது. இதனால் வாகனத்தை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. என்றும் எனவே, தமிழக அரசால் ஏற்கனவே வழங்கப்பட்ட வாகனங்களுக்கும், வருங்காலங்களில் வழங்கப்படவுள்ள வாகனங்களுக்கும் reverse gear (பின்னோக்கி இயக்கம்) அமைக்கும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப (advanced technology)வசதியை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்
;