Follow Us On:

;

ஈரோட்டில் மாற்றுக் கட்சியில்இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு வருகை*

📅Sep 3rd 2025

ஈரோட்டில் மாற்றுக் கட்சியில்இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு வருகை*

Event Banner

*ஈரோட்டில் மாற்றுக் கட்சியில்இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு வருகை* *தலைவர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் இணைந்தனர் !* ஈரோட்டில் 130 பேர் மனிதநேய மக்கள் கட்சியின் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர் ஈரோடு மீரான் தலைமையில் அக்கட்சியில் இருந்து விலகி மனிதநேய ஜனநாயக கட்சியில் தலைவர் மு.தமிமுன் அன்சாரி முன்னிலையில் தங்களை மஜக-வில இணைத்துக் கொண்டனர். அதுபோல் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட தலைவர் ஜாபர் அலி தலைமையில் 10 பேரும் தங்களை மனிதநேய ஜனநாயக கட்சி இணைத்துக் கொண்டனர். இவர்களின் இணைப்பு விழா ஈரோட்டில் திருநகர் காலனியில் உள்ள ஹாஜியானா மண்டபத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது. முன்னதாக வாகன ஊர்வலத்துடன் கூடிய மரியாதையை அவர்கள் தலைவர் அவர்களுக்கு வழங்கினர். இணைப்பு நிகழ்வில் அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு கட்சியின் துண்டு அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய தலைவர் அவர்கள், ஒரே களத்தில் முன்பு பணியாற்றியவர்கள் தற்போது அரசியல் கல்லூரியான மனிதநேய ஜனநாயக கட்சிக்கு வருகை தந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டார். இது போன்ற இணைப்பு நிகழ்ச்சிகள் இனி தொடர்ந்து ஆங்காங்கே நடக்க இருப்பதாகவும் கூறிய அவர், கட்சிக்கு வருபவர்கள் கட்சியின் பன்முக தன்மையை புரிந்து கொண்டு, பரந்து விரிந்த அரசியல் பார்வையோடு செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அனைவரும் சமூக வலைதளங்களையும் கடந்து, தினமும் பத்திரிகை வாசிக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர், விரைவில் அரசியல் பயிற்சி முகாமும் புதியவர்களுக்காக நடத்தப்படும் என்றும் கூறினார். மஜக-வில் நம்பிக்கையுடன் இணையும் அனைவருக்கும் உரிய பொறுப்புடன் கூடிய மரியாதை செய்யப்பட்டு வருவதையும் அது தொடரும் என்பதையும் அவர் பலத்த கைத்தட்டுகளுக்கு இடையே தெரிவித்தார். இந்நிகழ்வுக்கு ஈரோடு கிழக்கு மாவட்ட அவை தலைவர் முஹம்மது ஹாரிஸ் அவர்கள் தலைமை ஏற்றார். அனைவரையும் மாநில துணைச் செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான அந்தியூர் ஷானவாஸ் அவர்கள் வரவேற்று பேசினார். பிறகு மாநில செயலாளர் பாபு ஷாகின்ஷா அவர்கள் வாழ்த்தி பேசினார். புதிதாக வந்த அனைவருக்கும் விருந்தோம்பல் நிகழ்வு நடைபெற்றது. அதன் பிறகு ஒவ்வொருவரும் தலைவர் அவர்களுடன் குழு படமும், தனிப்படமும் எடுத்துக் கொண்டனர். நிகழ்வை இளைஞர் அணி மாநில செயலாளர் திருச்சி ஷெரிப் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் மஜக சமூகநீதி பாசறை மாநிலச் செயலாளர் நெல்லை.ரமேஷ், தகவல் தொழில் நுட்ப அணி மாநில செயலாளர் ரஹ்மான், மனித உரிமை அணியின் மாநில செயலாளர் திருப்பூர் கண்ணன், வர்த்தக அணி மாநில துணைச் செயலாளர் ஈரோடு எஹ்சான், இளைஞரணி மாநில பொருளாளர் இம்ரான், கொங்கு மண்டல இளைஞர் அணி செயலாளர் ஈரோடு திலீப், தலைமை செயற்குழு உறுப்பினர் கொடிவேரி சாதிக், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் சாகுல், சேலம் மாநகர மாவட்ட செயலாளர் A.K.சதாம் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியில் நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
;